• Latest News

    November 02, 2016

    தனியார் சட்ட திருத்த விவகாரம் : முஸ்லிம்கள் அச்சம் - தேசிய ஷூரா சபை தெரிவிப்பு

    முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் திட்டம் தொடர்பில் தேசிய ஷூரா சபை விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

    கடந்த ஆட்­சியின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்­பான விட­யங்கள் கார­ண­மாக ஐரோப்­பிய ஒன்­றியம் நமக்கு வழங்­கி­யி­ருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் சலு­கையை நீக்கிக் கொண்­டது.

    இதன் போது, மனித உரி­மைகள் மற்றும் அர­சியல் உரி­மை­களை கடந்த அர­சாங்கம் மீறி வந்­த­மையே அதற்­கான பிர­தான கார­ணங்­க­ளாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டன.

    அதன் பின் ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் சலு­கையை மீண்டும் பெறு­வ­தற்கு பெரும் முயற்சி எடுத்து வந்­த­துடன், இறு­தியில் அச்­ச­லு­கையை மறு­ப­டியும் பெற வேண்­டு­மாயின் அதற்­காக 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்­கைக்கு விதித்­துள்­ள­தாக ஊட­கங்கள் மூலம் அறி­யக்­கி­டைத்­தது.

    நாம் அறிந்த விதத்­திலும் வெளி­யா­கிய தக­வல்களின் படியும் மேற்­படி நிபந்­த­னைகள் அனைத்தும் மனித மற்றும் அர­சியல் உரி­மை­களை பாது­காப்­பது தொடர்­பா­ன­வையே.

    இந்த நிலையில், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு இசை­வாகும் ஒரு நட­வ­டிக்­கை­யாக இலங்­கையின் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த உப குழு­வொன்றை நிய­மிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை தீர்­மானித்­துள்­ள­தாக வெளி­யா­கிய செய்தி இலங்கை முஸ்­லிம்­களை வியப்­பிற்கும் அதிர்ச்­சிக்கும் உட்­ப­டுத்­தி­யுள்­ளது.

    இஸ்­லா­மிய சட்­டத்­துடன் இசை­வாகும் விதத்தில் தற்­போது இலங்­கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில மாற்­றங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற கருத்தை தேசிய ஷூரா சபையும் கொண்­டுள்­ளது.

    ஆனால், அச்­சீர்­தி­ருத்தம் தொடர்­பான செயற்­பா­டு­களை இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள் தலை­மையில் முஸ்லிம் சமூ­கமே மேற்­கொள்ள வேண்டும் என்­பதும் அதைத் தவிர்த்து, அந்த மாற்­றங்கள் வெளி நபர்­களால் மேற்­கொள்­ளப்­பட முடி­யாது என்­பதும் எமது நிலைப்­பா­டாகும்.

    இறை கட்­ட­ளை­களின் அடிப்­ப­டையில் உள்ள இஸ்­லா­மிய சட்­டங்­களில் உள்­நாட்டு சூழ­லுக்கு ஏற்­ற­வாறு சில சிறிய மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தென்­பது மிகவும் எச்­ச­ரிக்­கை­யுடன் அணுக வேண்­டிய ஒரு விட­ய­மாகும்.

    இத­ன­டிப்­ப­டையில், இவ்­வி­டயம் தொடர்­பாக நீதி­பதி ஸலீம் மர்சூஃப் தலை­மையில் பல முஸ்லிம் மார்க்க அறி­ஞர்கள் மற்றும் விற்­பன்­னர்­களைக் கொண்ட ஒரு குழுவை அர­சாங்கம் நிய­மனம் செய்­த­துடன், கடந்த 7 ஆண்டு கால­மாக இது பற்றி அக்­குழு தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றது. அத்­துடன், அக்­கு­ழுவின் இறுதி அறிக்கை முற்றுப் பெறும் தறு­வாயில் உள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

    இந்த நிலையில், இது போன்ற பார­தூ­ர­மான ஒரு விட­யத்தை அமைச்­ச­ரவை நிய­மித்­துள்ள ஒரு உப குழுவின் பொறுப்பில் விடு­வதன் விவேகம் பற்­றிய கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது.

    மேலும், இதில் உட்­படும் முஸ்லிம் அமைச்­சர்கள் ஏதேனும் தவ­றுகள் செய்யும் பட்­சத்தில் இஸ்­லா­மிய சமூ­கத்தின் தீராத விச­னத்­திற்கும் இலக்­காகும் அபா­யமும் உள்­ளது என்­ப­தையும் அவர்கள் கவ­னத்தில் கொள்ளல் வேண்டும்.

    ஒரு­வ­ருக்கு விருப்­ப­மான மதத்தைப் பின்­பற்றும் உரிமை நம் அர­சியல் யாப்பு மூலமே உறுதி செய்­யப்­பட்­டுள்­ளதை யாவரும் அறிவர். அதன் படி, இஸ்­லாத்தின் சட்ட திட்­டங்கள் மீது கை வைப்­பது என்­பது ஒரு ஜன­நா­யக உரிமை மீது கை வைப்­ப­தற்கு சம­மாகும்.

    தமது மார்க்­கத்தின் அடிப்­ப­டையில் செயற்­படும் சுதந்­தி­ர­மா­னது கால­னித்­துவ ஆட்­சிக்கும் முன்­பி­ருந்தே முஸ்­லிம்­க­ளுக்­குள்ள ஒரு உரி­மை­யாகும்.

    அத்­துடன், இஸ்­லா­மிய சட்­டமும் தனி­நபர் சட்­டமும் நம் நாட்டில் ஒரே சட்டக் கோவையில் இடம் பெற்­றுள்­ள­மை­யா­னது, இன பன்­மு­கத்­தன்மை இலங்­கையின் அர­சியல் சாசனம் மூலமே ஊர்­ஜிதம் செய்­யப்­பட்­டுள்­ள­மைக்­கான சிறந்த ஒரு உதா­ர­ண­மாகும்.

    அத்­துடன் பல இனங்கள் சம உரி­மை­யுடன் வாழும் ஒரு தேசம் என்ற வகையில் நாம் பெரு­மைப்­படக் கூடிய ஒரு விட­யமும் ஆகும்.
    இதை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­னது அர­சாங்கம் தற்­ச­மயம் மேற்­கொண்டு வரும் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளையும் பாரிய விதத்தில் பின்­ன­டையச் செய்­து­வி­டலாம்.

    எனவே, ஒரு தலைப்­பட்­ச­மாக அரசு திட்­ட­மிட்டு வரும் மேற்­படி முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்த முன்­னெ­டுப்பை, ஸலீம் மர்சூஃப் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை பிற்படுத்துமாறு தேசிய ஷூரா சபை கேட்டுக்கொள்கின்றது.

    அத்துடன், 2015 ஜனவரி மாதத்தில் நம் நாட்டு அரசியல் அரங்கில் ஏற்பட்ட சரித்திர முக்கியத்துவம் மிக்க மாற்றத்திற்கு துணிச்சலாக தோள் கொடுத்து முக்கிய பாத்திரமேற்று செயற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்தை எமது சபை கேட்டுக்கொள்கின்றது.
    ஜீ.எஸ்.பி பிளஸ் சலு­கைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்­கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்டு வரு­வ­தாக வெளி­யா­கி­யுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தேசிய ஷூரா சபை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனியார் சட்ட திருத்த விவகாரம் : முஸ்லிம்கள் அச்சம் - தேசிய ஷூரா சபை தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top