• Latest News

    November 12, 2016

    கல்வி அமைச்சரே இது உங்கள் கவனத்துக்கு....

    அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று வலயத்தில் பொத்துவில் கோட்டத்தில் இருக்கும் ஒரு கிராமப் புரம்தான் செங்காமம். இங்கே வசிக்கும் மக்களின் நலனுக்காக அவர்களின் பிள்ளைகள் கல்வியையிழந்து திரிந்ததைப் பார்த்த ஒருவரின் சிந்தனையில் உருவானதுதான் இப்பாடசாலை.

    அல்-மினா வித்தியாலயம் என்னும் பெயரில் இயங்கும் இப்பாடசாலையில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஒன்பது வரை இங்கே மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.

    இப்பாடசாலையில் ஆசிரியர்கள் வெறும் ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் கல்வி கற்பிக்கின்றார்கள். ஆனால் ஒன்பதாம் தரம் வரை இருக்கும் ஒரு பாடசாலைக்கு ஒன்பது ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவதா..?
    என்ற கேள்வியை கேட்டு
    இதனைக் கல்வி அமைச்சரின் நேரடிக்கவனத்துக்கு கொண்டு வர விரும்பியே.. இந்த தகவலை இங்கே பதிவிடுகிறேன்.

    அத்துடன் 40 அடி நீளத்தில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒன்பது வகுப்புக்கள் வைத்து கற்பிக்கலாமா....? இந்த மாணவர்களின் பரிதாப நிலையினை இதுவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்...? கண்ணீர் வருகிறது..!
    வெயிலிலும் மழையிலும் சிரமப் பட்டுத் திரியும் வறிய மக்களான இக்கிராம மக்களுக்கு அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட அரசு கொடுத்திருக்கும் சந்தர்ப்பத்தை தட்டிப் பறிப்பதாகவல்லவா..! இது இருக்கிறது...!

    எனவே இப்பாடசாலையில் அவசரமாகவும் அவசியத் தேவையாகவும் இருக்கும் கட்டிடத் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பீர்களா....?
    கல்விக்காக மாத்திரம் கிழக்கு மாகாண சபைக்கு 7500 மில்லியன் நிதி இம்முறை வந்திருக்கும் நிலையில் இப்பாடசாலைக்கு கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை என்றால் இதனை விட வரலாற்றுத் துரோகம் வேறெதும் இல்லை என்பதனை கட்டாயமாகச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இது கல்வி அமைச்சின் பிழையல்ல.. ஏன் என்றால் கல்வி அமைச்சுக்கு இவ்விடயம் இதுவரை தெரியப்படுத்தப் படவில்லை.. எனவே இன்று கல்வி அமைச்சும் உலகமும் அறியுமுகமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கும் இந்நிலையினை உடனே மற்றுவீர்கள் இதற்காக நீங்கள் அனைவரும் உதவுவீர்கள் கல்விக்கு உதவுவோர் என்றும் மறணிப்பதில்லை என்ற முதுமொழிக்கு ஏற்ப உங்கள் சிறந்த சேவை இப்பாடசாலைக்கு இருக்கும் என மனதாற நம்புகிறேன்.

    இப்பாடசாலையின் குறைகளாக அவசரத் தேவைகளாவன:...

    அவசரம் கட்டிடம்
    கற்பிக்க ஆசிரியர்கள்
    மாணவர்களுக்கு குடி நீர்
    தளபாடங்கள்.. இன்னும் பல

    இவைகளை வழங்கி இக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்களின் கல்விக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று தயவாய் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்..

    அட்டாளைச்சேனையில் இருந்து எஸ்.எல்.முனாஸ்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வி அமைச்சரே இது உங்கள் கவனத்துக்கு.... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top