புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான வரைபை பலவந்தமாக நிறைவேற்ற
அரசாங்கம் தயாராகி வருவதாக கூட்டு எதிர்க்கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதனால்,
அப்படியான நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக நாடாளுமன்ற
உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பேச்சுவார்த்தை ஒன்று
நடைபெற்றுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
2002ஆம்
ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில்
நாடாளுமன்றத்திற்கும் அறிவிக்காமல், விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறித்தும் இதன் போது பேசப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியினர் இவ்வாறான செய்திகளை
ஊடகங்களில் வெளியிட்டு வந்த போதிலும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை
உருவாக்கும் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையில் அவர்கள் அனைவரும் அங்கம்
வகித்து வருகின்றனர்.
உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் என்ன
என்பது அவர்களும் தெரியும் என்பதுடன், அரசாங்கம் பலவந்தமாக அரசியலமைப்புச்
சட்ட வரைபை நிறைவேற்ற எந்த வாய்ப்பும் இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதே இதற்கு காரணம் என அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment