( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கனேடிய உலக
பல்கலைக்கழக சேவை ( wusc) அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்புடன் இணைந்து அக்கரைப்பற்று
சுவாட் தலைமைக் காரியாலயத்தில் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்டத்தில் அரச உத்தியோஸ்தர்கள்
மற்றும் தொழில் வாய்ப்புகளையும் தொழில் பயிற்சிகளையும் வழங்குகின்ற தனியார் நிறுவனங்களுடன்
இணைந்து எதிர்காலத்தில் இளைஞர்கள் யுவதிகள் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்
கொள்ளும் வகையில் பெற்றோர்களையும் இளைஞர்களையும் ஊடகங்கள் ஊடாக விழிப்புணர்வுட்டும்
செயல்திட்டம் தொடர்பாக ” வாழ்க்கைக்கு திறன் திறனுக்கு தொழில் எனும் தொனிப் பொருளிலான
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
சுவாட் அமைப்பின்
தலைவர் வீ.பரமசிங்கம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில் சுவாட் அமைப்பின் திட்ட
முகாமையாளர் திரு. க.பிரேமலதன் கனேடிய உலக பல்கலைக்கழக சேவை ( wusc) சிரேஸ்ட திட்ட
உத்தியோஸ்தர் திரு.ஜேசுசஹாயம் கனேடிய உலக பல்கலைக்கழக
சேவை ( wusc) சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட உத்தியோஸ்தர் திருமதி ஏ.கவிதா ஆகியோர் வளவாளர்களாக
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment