அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் முடிவின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசியல் தளமும் மிகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தோல்வியடைந்த ஹிலரி கிளின்டனின்
தோல்விக்கான காரணங்களை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடையாளம் காண வேண்டும்
என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடத் தயாராக உள்ளார்.
இலகுவான
வெற்றியொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ரணில்
செயற்பாடுகள் தற்போது அமைந்துள்ளது. எனினும் ஜனாதிபதி கனவு பிரதமருக்கு
நனவாக வேண்டும் என்றால், தோல்வியின் கசப்பான அனுபவங்களை ஹிலரியிடமிருந்து
கற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி தனக்கான எதிராளியை குறைத்து மதிப்பிட்டமையே தோல்விக்கான காரணமாகும்.
அமெரிக்காவின்
மிகப் பெரிய கோடிஷ்வரரான டொனால்ட் ட்ரம்ப் வீதிக்கு இறங்கி தீவிர
பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும், தனக்கு சாதகமற்ற தன்மை நிலவும் போதும்
ஹிலரி அமைதியான பிரச்சாரத்தையே மேற்கொண்டார்.
இலங்கையின் சமகால
அரசியல் நிலவரங்களை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி வெற்றி உறுதி என்ற
நிலைப்பாட்டை ரணில் கொண்டுள்ளார். எனினும் அது அவ்வளவு எளித்தல்ல என்பதை
அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்
ஏற்பட்டுள்ள பிளவு, வெற்றியை உறுதி செய்யும் என ரணில் நம்பி உள்ளார்.
அவ்வாறு சிந்தித்தால் அது முட்டாள்தனமானதாகும்.
ஏனெனில்
பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒன்றிணைத்து வலுவான சக்தியாக
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள திரைமறைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
தேர்தலை இலக்கு வைத்து சுதந்திர கட்சி இரண்டு விதமான
வழிமுறைகளை கையாண்டு வருகிறது. ஒன்று பிளவுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து
ஒரு சக்தியாக செயற்படுவது. மற்றையது முன்னாள் ஜனாதிபதிக்கு சுதந்திர
கட்சியில் வலுவான பொறுப்பொன்று கொடுப்பதன் மூலம் வாக்கு வங்கியை தக்க
வைத்துக் கொள்வதாகும்.
இவ்வாறான அரசியல் பின் நகர்வுகளை ரணில் விக்ரமசிங்க கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும்.
ஹிலரி
எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் உலகத்தை பற்றி உரையாற்றிய
சந்தர்ப்பத்தில் ட்ரம்ப் நாளை மறுதினம் செய்ய வேண்டிய வேலை குறித்து
பேசினார். ரணிலும் 2020ஆம் ஆண்டில் தனிப்பட்ட வருமானத்தை அதிகரிப்பது
குறித்தே கருத்து வெளியிட்டு வருகிறார்.
உடனடியாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கவில்லை என்றால் ரணில் வேண்டாம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுவிடும்.
ஹிலரி
ஊடகங்களுடன் நெருக்கமாக செயற்பட்டார். ரணில் விக்ரமசிங்கவும் நுட்பமாக
ஊடகங்களை தன் பக்கம் திருப்பிக் கொள்ள முயற்சிக்கின்றார். தற்போது தனக்கென
ஒரு ஊடக வலையமைப்பை ரணில் உருவாக்க முயற்சிக்கினார். தனக்கென ஊடகம் ஒன்று
காணப்பட்டாலும் ஏனைய சிறிய ஊடகங்களையும் தன் பக்கம் வைத்துக் கொள்ள
முயற்சிக்கினார்.
ட்ரம்ப அடிமட்டத்திற்கு இறங்கி தனது பிரச்சார
நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இளைஞர்களின் மனதிற்குள் செல்லும் வகையில்
பேசினார். ரணிலுக்கும் அவ்வாறு பேச முடியும் எனினும் அது தரத்தை
மேம்படுத்தியதாக காணப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க
தேர்தல் முடிவுகள் பலருக்கு கொடுத்த அதிர்ச்சி போன்று, 2020ம் ஆண்டு
இலங்கை தேர்தல் களத்திலுத்திலும் ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து
பார்ப்போம்
0 comments:
Post a Comment