• Latest News

    November 11, 2016

    தீவி­ர போக்­குகள் பிழை­யான புரி­த­லையே தோற்­று­விக்­கும் - நிதா­னத்தை கடைப்­பி­டிக்­கு­மாறு உலமா சபை கோரிக்­கை

    முஸ்லிம் சமூக விவ­கா­ரங்­களை தீவிரப் போக்கில் அணு­கு­வதை தாம் கண்­டிப்­ப­தாக தெரி­வித்­துள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, இவ்­வா­றான செயற்­பா­டுகள் இஸ்லாம் பற்­றிய பிழை­யான புரிதல் மாற்­று­மத சகோ­த­ரர்­க­ளி­டையே ஏற்­ப­டவே வழி­வ­குப்­ப­தாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
    முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் வெ ளியிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

    அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,  இலங்­கையில் பல நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­களால் பின்­பற்­றப்­பட்டு, பேணப்­பட்­டு­வந்த சட்­ட­மாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்­ப­டு­கின்­றது.

    அன்று தொட்டு இன்று வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு­வந்த இந்த சட்­டத்தைத் தொடர்ந்தும் பேணிப்­பா­து­காப்­பது நம் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கட­மை­யாகும்.

    சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மாக அல்­லது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் தீய சக்­தி­களின் தூண்­டு­தல்கள் கார­ண­மாக முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வதை  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மிக வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.
    முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஷரீ­ஆ­விற்கு முர­ணில்­லாத வகையில் தற்­காலத் தேவை­க­ளுக்கு ஏற்ப சில மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்துக் கிடை­யாது.

    இதன் ஒரு கட்­ட­மா­கவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் ஸலீம் மர்ஸூப் தலை­மையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்­கான திருத்­தங்­களை முன்­மொ­ழி­வ­தற்­கான ஒரு குழு நிய­மிக்­கப்­பட்டு, அதன் இறுதி அறிக்கை தற்­போது வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

    இந்­நி­லையில் சில சர்­வ­தேச அழுத்­தங்கள் கார­ண­மாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்­திற்­கான புதி­ய­தொரு குழு நிய­மிக்­கப்­ப­டு­வது எவ்­வ­கை­யிலும் பொருத்­த­மா­ன­தாக அமை­யாது என்­பதை அர­சாங்­கத்­திற்கு மிகவும் தெளி­வாகக் கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றோம்.

    முஸ்லிம் தனியார் சட்டத் திருத்­தங்கள் இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக மேற்­கொள்­ளப்­ப­டா­ம­லி­ருக்க உல­மாக்கள், துறை­சார்ந்­த­வர்கள் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் விழிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.

    இவ்­வி­ட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் உரிய தரப்­பி­ன­ருடன் இணைந்து இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

    இஸ்லாம் சமூக நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வை வலி­யு­றுத்தும் மார்க்­க­மாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்­மையை கடை­பி­டிக்­கு­மாறு இஸ்லாம் எமக்குப் போதிக்­கின்­றது. முஸ்லிம் சமூகம் தமது உரி­மை­களைப் பாது­காத்­துக்­கொள்ள முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் இஸ்­லா­மிய வரை­ய­றை­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவும் நிதா­ன­மா­ன­தா­கவும் அமைய வேண்டும்.

    இஸ்லாம் எமக்குக் கற்­றுத்­தந்­துள்ள பேச்சு ஒழுங்­கு­க­ளையும், உய­ரிய பண்­பா­டு­க­ளையும் நிலை­நி­றுத்­தாது நாம் செயற்­பட்டால் அல்­லது சமூக வலைத்­த­ளங்­களில் எழு­தினால் இஸ்லாம் பற்­றிய பிழை­யான புரி­தலை மாற்­று­மத சகோ­த­ரர்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­திய குற்­றத்­திற்கு நாம் ஆளா­கி­வி­டுவோம். இவ்­வா­றான பிழை­யான நட­வ­டிக்­கை­களை ஜம்­இய்யா வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.

    மேலும் இவை இஸ்­லாத்­திற்கு எதி­ராக செயற்­படும் கடும்­போக்­கு­வா­தி­க­ளு­டைய தீய திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­ய­மைத்துக் கொடுப்­ப­தா­கவே அமையும் என்­ப­தையும் ஜம்­இய்யா கூறிக்­கொள்ள விரும்­பு­கின்­றது.

    அதே­போன்று ஒரு­சி­லரின் இவ்­வா­றான தீவிர செயற்­பா­டுகள் மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் நட­வ­டிக்­கை­யாக ஒரு­போதும் பார்க்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதை ஜம்­இய்யா வலி­யு­றுத்தி கூறிக்­கொள்­கி­ன்­றது.

    அத்­துடன் பல்­லாண்டு கால­மாக இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் இடையில் காணப்­பட்டு வரும் ஒற்­று­மையும் சக­வாழ்வும் தொடர்ந்தும் பேணப்­பட அர­சாங்கம் உட்­பட சகல தரப்­பி­னரும் முனைப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தீவி­ர போக்­குகள் பிழை­யான புரி­த­லையே தோற்­று­விக்­கும் - நிதா­னத்தை கடைப்­பி­டிக்­கு­மாறு உலமா சபை கோரிக்­கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top