• Latest News

    November 16, 2016

    ஆக்கியவர்களே அமைச்சர் ஹக்கீமை அழிக்க ஆயுதம் தூக்கியுள்ளனர்

    முஸ்லிம் காங்கிரஸின் இணைத் தலைவர்களில் ஒருவராகயிருந்த அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதில் வைத்து தனித் தலைமையாக பிரகடனப்படுத்தப்பட்டார்.முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக பலத்த சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம் சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கிய ஒத்துழைப்பை யாருமே மறந்து விட முடியாது.2004ம் ஆண்டு தேர்தலின் போது பொத்துவில் தொகுதியில் அதாவுல்லாஹ்வும்இசம்மாந்துறை தொகுதியில் அன்வர் இஸ்மாயிலும்இகல்முனை தொகுதியில் ஹரீசும் தேர்தல் கேட்ட போது சம்மாந்துறைஇபொத்துவில் ஆகிய இரு தொகுதி மக்களும் மு.காவிற்கு எதிராக தேர்தல் கேட்ட குறித்த வேட்பாளருக்கு ஆதரவளித்த போதும் கல்முனை தொகுதி மக்கள்  ஹரீசிற்கு வாக்களிக்கவில்லை.இதன் காரணமாகவே ஹரீஸ் தோல்வியையும் தழுவியிருந்தார்.இதன் போது தனது ஊரில் மு.காவினூடாக மாத்திரமே அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என்ற விடயத்தை அறிந்து மு.காவின் பக்கம் தனது முகத்தை திருப்பினார்.

    அன்று அந்த மக்களும் மு.காவை விரட்டி இருந்தால் இன்று அமைச்சர் ஹக்கீம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டுருப்பார்.கல்முனை தொகுதியில் பல ஊர்கள் உள்ள போதும் மு.காவின் வளர்ச்சிக்கு அதிக வாக்கெண்ணிக்கையை கொண்ட சாய்ந்தமருதின் பங்களிப்பே முதன்மையானது.இதுவரை காலமும் அங்கு மு.கா எதுவித  போட்டியுமின்று மிக இலகுவாக வெற்றிகொள்ளும்.இப்படி மு.காவிற்கு ஆதரவளித்து வந்த சாய்ந்தமருதில் மக்கள் இன்று அமைச்சர் ஹக்கீமை கூக்குரலிட்டு பேசவிடாமல் விரட்டியுள்ளனர்.14-11-2016ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் அந்த மக்கள் மு.காவைச் சேர்ந்த பலர் உரையாற்றிய போது எதுவித குழப்பமும் செய்யாமல் இருந்த போதும் அமைச்சர் ஹக்கீம் பேசிய போது பொங்கி எழுந்து கூக்கிரல் இட்டதோடு மிகவும் கடின வார்த்தைகளால் ஏசியுமுள்ளனர்.இது அந்த மக்கள் மு.கா என்ற கட்சியை வெறுத்து ஒதுக்க முடியாமல் அதற்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஹக்கீமை துரத்தும் நிகழ்வாகவும் பார்க்கலாம்.இப்படி கூச்சலிட்டு தடுத்தவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தால் மேடைகளை நிறுவ இயலாதவாறு குழப்பம் செய்திருக்கலாமல்லவா?

    ஒரு காலத்தில் மு.காவின் எதிரிகள் பிரச்சார மேடைகள் போட்டு பேச குலை நடுங்கிய ஊர் தான் சாய்ந்தமருது.இன்று அங்கு அமைச்சர் ஹக்கீம் அந்த மக்களின் எதிர்ப்பினால் தனது பிரச்சார கூட்டத்தை முடிக்கும் நிலை.ஆனால்இஅங்கு அமைச்சர் றிஷாத் அண்மையில் கூட தனது பிரச்சார கூட்டத்தை எதுவித தடையுமின்று நடாத்தியிருந்தார்.அந்த பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட குறித்த நேரத்தையும் தாண்டி நடாத்திய போதும் அதனை சட்ட ரீதியாக தடுக்க முயல கூட நாதியில்லாத நிலை.இது மு.காவின் அஸ்தமன அரசியலை புடம் போட்டு காட்டுவதோடு அமைச்சர் றிஷாதின் வளர்ச்சியையும் துல்லியமாக்குகின்றது.

    புத்தளம் பாயிஸ் மு.காவில் இணைந்தமை மு.காவின் ஆதரவாளர்களுக்கு ஒரு உற்காசத்தை வழங்கியிருந்தது.அந்த உற்சாகத்தோடு உற்சாகமாக சாய்ந்தமருதிலும் ஒரு நிகழ்வை நடாத்திக் காட்டினால் உளவியல் ரீதியாக பின் வாங்கிய மு.காவின் ஆதரவாளர்களை மீட்டுக் கொள்ளலாம் என கணக்கு போட்டே அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.அங்கு நடந்த விடயம் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளை இன்னும் இன்னும் உள ரீதியாக பின் வாங்கச் செய்துள்ளதாக அறிய முடிகிறது.மு.காவின் சில முக்கியஸ்தர்கள் தங்களுக்கு மிக நெருங்கியவர்களுடன் இப்படிப் போனால் இந்த கட்சி (மு.கா) மிக விரைவில் அழிந்துவிடும் என கதைப்பதாகவும் அறியக் கிடைத்தது.

    புத்தளத்து புத்துணர்ச்சியை தக்க வைக்க முனைந்த அமைச்சர் ஹக்கீம் கள நிலவரத்தை புரிந்து கொண்டு புத்தளத்தில் அமைச்சர் றிஷாதை இகழ்ந்தமை பிழையானது போன்று ஏற்றுக்கொண்டு தனது எதிர்ப்பை குறைக்க முயன்றார்.ஆனால்இஅது எதுவுமே அந்த மக்களிடம் எடுபடவில்லை.குறித்த மக்கள் கூச்சலிட்டு கூச்சலிட்டு பிரச்சார மேடையை நெருங்கினார்கள்.அமைச்சர் ஹக்கீம் பிரச்சார மேடையில் சிலர் கூச்சலிடுகிறார்கள் என அவர் தனது பிரச்சாரத்தை முடிப்பதற்கு பதின் ஐந்து நிமிடங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.பதினைந்து நிமிடங்களாக அந்த மக்கள் தங்களது எதிர்ப்பை நின்று வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அது ஒட்டு மொத்த சாய்ந்தமருது மக்களின் எதிர்ப்பு என்றுதான் பொருள் எடுக்க வேண்டும்.அங்கு மு.காவின் ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்கள் தான் அதிகமாக நின்றுள்ளனர்.

    இது மாத்திரமா? இவர்களது நிகழ்வுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் வெளியீடுஇகறுப்பு கொடி கட்டல்இபதாதைகளை உடைத்து எறிதல்இடயர் போட்டு பற்ற வைத்தல்இமு.காவின் செயலாளர் மன்சூர் ஏ காதர் மற்றும் ஹனீபா மதனி ஆகியோர் சென்ற வாகனத்தை சேதப்படுத்தியமையென பல வகையிலும் தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.சாய்ந்தமருது மக்கள் அடங்கி வைத்த உள்ளக் குமுறல்களின் வெடிப்புக்கள் தான் இவைகள்.இருந்தாலும் தங்களது எதிர்ப்புகளை வாக்குகளினூடாக வெளிப்படுத்த வேண்டுமே தவிர இவைகள் பிழையான செயற்பாடுகள் என்பதை இவ்விடயங்களை செய்தவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இதுவரையில் ஒலுவில்இபாலமுனை போன்ற பிரதேசங்களில் சிறு சிறு சல சலப்புக்களை சந்தித்த அமைச்சர் ஹக்கீமை துரத்தும் விடயத்தை சாய்ந்தமருது மக்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.ஆக்கியவர்களே அழிக்க ஆயுதம் தூக்கியுள்ளனர்.இனி மு.காவின் அழிவு எனவோ கண் முன்னே தெரிகிறது.இதன் போது தோற்றம் பெற்ற விமர்சனங்களை சமாளிக்க சிராஸ் ஜெமீல் முறுகலை கையில் எடுத்தமை அவர்களது இயலாமையை தெளிவாக அறிந்து கொள்ளச் செய்கிறது.

    இப்றஹிம் மன்சூர்
    ஆசிரியர்
    கிண்ணியா

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆக்கியவர்களே அமைச்சர் ஹக்கீமை அழிக்க ஆயுதம் தூக்கியுள்ளனர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top