ஆவா குழு கோத்தபாய ராஜபக்சவின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் உறுதியாக கூறியுள்ளார்.
ஆவா
குழுவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கோத்தபாய கூறியுள்ள
போதிலும், இந்த குழு அவரது பூரண ஆசியுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்த
சகல தகவல்களையும் வெளியிட போவதாகவும் அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.
ஜோசப்
பரராஜசிங்கம், பிரகீத் எக்நேலிகொட, நடராஜா ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க
ஆகியோரின் கொலை சம்பவங்களில் இருந்து இவர்கள் விடுபட முடியாது.
விசாரணைகளின் இறுதியில் என்ன நடந்தது என்ற உண்மையை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
ஆவா குழு தொடர்பில் நான் வெளியிட்ட தகவலால் இராணுவத்திற்கு அவமதிப்பு ஏற்படும் என கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
நான்
இராணுவத்திற்கு எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்படியான குழுக்களை
ஆரம்பிக்க இராணுவத்தினரை பயன்படுத்தியதன் மூலம் கோத்தபாய ராஜபக்சவே
இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன
மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment