முஸ்லிம் காங்கிரஸின் அனுசரனையுடன் இம்மாதம் 26,27ஆம் திகதிகளில் மருதமுனை அல்-மனாாில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா படுதோல்வி என்று தொிவிக்கப்படுகின்றது.
இரண்டு தினங்களாக நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவிற்கு எதிர் பார்த்த மக்கள் கூட்டம் வாரததால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் மிகுந்த கவலையில் இருப்பதாக தொிவிக்கப்படுகின்றன.
வழக்கமாக ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் வைபங்களின் போட்டோக்கள் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரவூப் ஹக்கீமின் முகநூலிலும், கட்சி யார் இணைதளங்கள், மு.காவிற்காக எழுதும் முகநூல் அபிமானிகளின் பக்கங்களிலும் வெளிவரும். ஆனால், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் போட்டோக்கள் அவ்வாறு வெளியாக வில்லை. மிகக் குறைந்தவர்களே இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவிற்கு வருதை தந்தமையால்தான் போட்டோக்களை வெளியிடவில்லையாம். மக்கள் கூட்டம் இல்லாத போட்டோக்களை வெளியிட்டால் கட்சியின் இறங்கு முகம் பட்டவெளிச்சமாகிவிடும் என்பதால் கட்சியின் ஒரு சில முக்கியஸ்தர்கள் போட்டோக்களை தணிக்கை செய்துள்ளார்களாம்.
இதே வேளை, ஒரு சில போட்டோக்கள் வெளியாகியுள்ளன. அப்போட்டோக்கள் கூட இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை ஊர்ஜிதம் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைப் புகழ்ந்து கவிதை பாடிய மேடையாக இருந்ததாகவும் தொிவிக்கப்படுகின்றன.
இது வரை வெளியான படங்கள்
0 comments:
Post a Comment