அக்தர் -
நிந்தவூாில்
நேற்று (03.12.2016) காலை 11 மணியளவில் நிறைபெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நிந்தவூர்
பிரதான வீதியால் அட்டப்பள்ளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி
முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் நேரடியாக மோதியது.
இதனால், மோட்டார் சைக்கிளில் வந்தவர் தெய்வாதினமாக உயிர் பிழைத்துக்
கொண்டார். ஆயினும், இவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நிந்தவூர் ஆதார
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே
வேளை, முச்சக்கர வண்டி சாரதி விபத்து நடந்தவுடன் குறிப்பிட்ட
இடத்திலிருந்து தப்பி ஓடினார். இவரை போக்கு வரத்துப் பொலிஸார் துரத்திச்
சென்று பிடித்தார்கள்.
முச்சக்கர வண்டியின் அதிக வேகமே
விபத்துக்கு காரணமென்று தொிவிக்கப்படுகின்றது. சம்மாந்துறைப் பொலிஸார்
இவ்விபத்துப் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment