
சூடு சுரணை இல்லாதவர்கள்
முஸ்லிம்களில்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கு - இது அமைச்சர் ராஜிதசேனாரத்னாவின் கருத்து. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை. புத்தர் சிலையை தலையில் வைத்தால் கவலை இல்லாதவர்கள். சூடு, சுரணை இல்லாதவர்களுக்கு செக்கும், சிவலிங்கமும் ஒன்றுதான்.
புத்தி பேதலித்த ஆதரவாளர்கள்.
தலைவர் அஸ்ரப்பின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று பசீர் சேகுதாவூத் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளார். இதனை பொறுத்துக் கொள்ளாத அவரது கட்சிக் காரர்கள் அதனை தடுத்து நிறுத்தம் திட்டம் போட்டுள்ளார்களாம். இவ்வளவு காலமும் என்ன செய்தார் என்று கேட்கின்றார்கள். அப்படியாக கேள்வி கேட்கின்றவர்கள் ஏன் கேட்கவில்லை. கேட்கவும் விடமாட்டார்கள். கேட்கின்றவனையும் கேட்க விடமாட்டார்கள். இதனால்தான் ஹக்கீம் 15 வருடமாக தலைவராக உள்ளார். யாரைக் குற்றம் சொல்லுவதென்று விவஸ்தையில்லாமல் போய் விட்டது. தலைவனின் மரண அறிக்கையை வெளியிடுமாறு கேட்கமால் இருக்கும் மு.காவின் தலைவரை கட்சியின் ஆதரவாளர்கள் தலைவர் என்று அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். புத்தி பேதலித்த ஆதரவாளர்கள்.
பறி போகுது நைட்டா
கல்முனையில் 19 வருடங்களாக இயங்கி வந்த நைட்டாவின் அம்பாரை மாவட்டக் காரியலாயம் 2016.11.15முதல் அம்பாரை நகருக்கு மாறுகின்றது. இதற்கான உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம். குறிப்பாக கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும் வாய் பொத்தியுள்ளார். முன்னதாக கல்முனையில் இயங்கிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அம்பாரை மாற்றப்பட்டது. இப்படியாக ஒவ்வொன்றாக கழன்று கொண்டிருந்தால் கடைசியில் கோவணமும் மிஞ்சாது போல் இருக்கின்றது. வக்கற்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் அனுபவிக்க வேண்டும்தானே.
அவர் துரத்தப்படுவது நிஷம்
தலைவர் நிறைய பிழைகளை செய்து கொண்டிருக்கின்றார். அவருடைய குடும்பத்திலுள்ளவர்களுக்குத்தான் கட்சியும், அமைச்சர் பதவியும் சேவை செய்கிறது. இது ஆதரவாளர்களின் கருத்து. தலைவரை மாற்ற வேண்டும். ஆள் இல்லாமலிருக்கே. இதுவும் ஆதரவாளர்களின் கருத்து. தனித்துவக் கட்சியின் தலைக்கு இன்று ஏற்பட்டுள்ள தலையிடிக்கு மூத்த தலைவர் ஒருவர்தான் காரணமாம். அவர்தான் தேர்தலுக்கு பணம் வாங்கியதையும், 18இற்கு கோடி வாங்கியதையும் பாலமுனையில் வைத்து உாித்துக் காட்டியுள்ளார். இது தனித்துவக் கட்சியின் தலைவருக்கு அண்மையில்தான் தொியுமாம். பலரும் விரண்டு கொண்டிருக்கும் சூழலில் மூத்த தலைவரை விரட்டாமல் வைத்துள்ளார். ஆனால், அவர் துரத்தப்படுவது நிஷம்.
நல்லா கட்சி நடத்துகிறார் தலைவர்.
தனித்துவக்கட்சி கடந்த வாரம் ப.டைஸில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது. அதில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லையாம். கனிஸ்ட ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில்லையாம். கிழக்கு மகா சபையில் பாலஸ்தீன் விவகார பிரேரணையை எடுக்கவில்லையாம். உங்களின் கட்சிக்காரர்தான் பிரேரணையை கொண்டு போய் உள்ளார். ஏன் பிரேரணையை எடுக்கவில்லை. தலைவர் சொன்னாராம் எனக்குத் தொியாதென்று. நல்லா கட்சி நடத்துகிறார் தலைவர்.
0 comments:
Post a Comment