குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நிகவெரட்டிய நகரத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீதே இவ்வாறு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு(06) இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு
முன்னரும் குருநாகல் மாவட்டத்தின் தெலியாகொன்ன பிரதேசத்தில் கண்டி வீதியில்
அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது கல் எறிந்து தாக்குதல்
நடத்தப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அந்தச் சம்பவத்தில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்திருந்தன.
சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கும், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(புகைப்படம் – நன்றி மடவளை நியூஸ்)
0 comments:
Post a Comment