• Latest News

    November 09, 2016

    கிண்ணியா - துறையடியில் புத்தர் சிலை?

    கிண்ணியா - துறையடியில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்படுவதாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் முஸ்லிம்கள் பெரிதும் அச்ச நிலைக்குள்ளாகியிருக்கின்றர்.
    கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களை மையமாக கொண்டு நகர்த்தப்படும் புதத்ர் சிலை விபகாரம் தற்பொழுது முஸ்லிம்களின் எல்லைப் பகுதிகளையும் நகர்கின்றமையானது, நாட்டில் பௌத்த மத்தை பரப்பி நாட்டிலுள்ள மக்களின் இன மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கமாக அமையலாம் என பலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் பல சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
    ஒரு சில பௌத்த குடும்பங்கள் கிண்ணியா துறையடியில் வசிக்கும் நிலையில், இங்கு புத்த சிலை வைப்பதனூடாக முஸ்லிம்களின் பூர்வீகத்தை அவர்கள் முற்றாக சுரண்டுவதோடு நில உரிமையும் முழுமையாக பறிபோகின்றது எனவும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
    இந்த விடயத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிண்ணியா - துறையடியில் புத்தர் சிலை? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top