ஓமானுக்கு பணிப் பெண்ணாக செல்லும் இலங்கைப் பெண்கள் ஏலத்தில்
விடப்படுவதாக அந்த நாட்டு ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் உயர்
மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.
மேலும், அது தொடர்பான உயர்
மட்ட விசாரணைகளை நடாத்துவதற்கான கோரிக்கை ஒன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அமைச்சர் தலதா அத்துகோரளவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓமானின்
சோஹார் பிரதேசத்தில் வைத்தே இலங்கைப் பணிப் பெண்கள் இவ்வாறு ஏலத்திற்கு
விடப்படுவதாக அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஓமானில்
உள்ள தூதுவர் காரியாலயத்திற்கு தெரியாமலேயே இவ்வாறு குறித்த பெண்கள்
விற்பனை செய்யப்படுவதாக டைம்ஸ் ஒப் ஓமான் பத்திரிகை செய்தி
வெளியிட்டிருந்தது.
எனவே, இது தொடர்பில் உயர் மட்ட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment