(றியாஸ் எம் இஸ்மாயில்)
உலக
நீரிழிவு தினத்தையொட்டி அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின்
ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன்
நடைபெறும் நீரிழிவு தொடர்பான இலவச விழிப்புணர்வுக் கருத்தரங்கு
இன்று(12.11.2016) காலை 9.30 மணியளவில் அட்டாளைச்சேனை பலநோக்குக்
கூட்டுறவுச் சங்க கூட்டமண்டபத்தில் நடைபெவுள்ளது.
பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.இர்பான் தலைமையில் நடைபெறவுள்ள இக்
கருத்தரங்கில் பொது வைத்திய நிபுணரும்,மருத்துவத்துறை விரிவுரையாளருமான
டாக்டர் எம்.உமாகாந் கலந்து கொண்டு நீரிழிவு நோய் தொடர்பான பல்வேறு
விளக்கங்களை இங்கு முன்வைக்கவுள்ளதாக ஹைலண்ட் விளையாட்டுக் கழகத்தின்
ஸ்தாபகத் தலைவர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்
பெறுமாறு ஹைலண்ட் விளையாட்டுக் கழக பிரதிச் செயலாளர் யூ.எல்.பசீல் கேட்டுக்
கொள்கின்றார்.

0 comments:
Post a Comment