• Latest News

    November 16, 2016

    வாரம் முடிந்தது சிலை அகற்றப்பட்டதா?

    அமைச்சர் ஹக்கீமிற்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு வார கால அவகாசத்திற்குள் சிலையை அகற்ற உறுதியளித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் இயக்கப்படும் இணைய தளங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஒரு  வாரம்  முடிவடைந்து விட்டது. பிரதமரின் வாக்குறுதியின் பிரகாரம் சிலை அகற்றப்பட்டுவிட்டதா? இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடம் கேள்வி எழுப்பினாரா?

    இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் கேட்ட போது அவ்வாறு கூறப்படுகின்ற போதும் அது பற்றி தனக்கு தெரியாதென கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிற்கு தெரியாததெல்லாம் போராளிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் சொல்லுகிறாரா? அல்லது தங்களது மீது பற்றுக்கொண்ட போராளிகளை பொய் கூறி ஏமாற்றுகின்றாரா?

    அமைச்சர் ஹக்கீம் ஏமாற்ற கூறிய பொய்யை நம்பிக் கொண்டு போராளிகளும் அதனை இணைய தளங்களில் பதிவேற்றிக்கொண்டார்கள் என்றே நினைக்கின்றேன்.
    இப்றாஹிம் மன்சூர்
    ஆசிரியர்
    கிண்ணியா
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாரம் முடிந்தது சிலை அகற்றப்பட்டதா? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top