• Latest News

    December 03, 2016

    மருதமுனை விசேட தேவையுடையோருக்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

    அபு அலா, சப்னி அஹமட்-
    மருதமுனை காரியப்பர் வீதியில் அமைந்துள்ள ஹியுமன் லின்க் விசேட தேவையுடையோருக்கான 35 இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மேல் தள புதிய கட்டிட திறப்பு விழா இன்று(03) கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

    இந்நிகழ்வுக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. கமுருத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல். மாஹிர், சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யூ.எம். வாஹிட் ,மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம். நயீம், இணைப்புச் செயலாளர் ஜெமீல் காரியப்பர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கே..காண்டீபன் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    இணைந்த முன்பள்ளி பார்வைகுறைபாடுகள் உடையவர்கள், பேச்சு குறைபாடு உடையவர்கள், கற்றல் குறைபாடு உடையவர்கள், மெல்லக் கற்பவர்கள் போன்றவர்களுக்கான சேவைகளுடன் இன்னும் பல சேவைகள் இங்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

    இதனை இன்னும் திறனபட முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அதன் இட வசதியை கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்  அதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டதன் பயனாகவே இன்று குறித்த நிறுவனத்திற்கான மேல்தள கட்டிடம் பூர்த்திசெய்யபட்டு மாணவச் செல்வங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறந்து கையளிக்கப்பட்டது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை விசேட தேவையுடையோருக்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top