• Latest News

    December 03, 2016

    சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் 12 வது வருடாந்த நிகழ்வு!

    எம்.வை.அமீர் -
    மருதமுனை சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் 12 வது வருடாந்த நிகழ்வு பாடசாலையின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் மருதமுனை அல் மானார் மத்திய மகாவித்தியாலய கூட்ட மண்டபத்தில் 2016-12-02 ஆம் திகதியன்று மிக விமர்சையாக இடம்பெற்றது.
    இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹுமான் மற்றும் வைத்திய நிபுணர் சித்தீக் ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டார். மாணவர்களின் தனி மற்றும் குழு கலைநிகழ்வுகள் அரங்கத்தை அதிரவைத்தன.
    CHILD FIRST பாலர் பாடசாலையின் மாணவர்கள் IWMS institute Colombo நிறுவனத்தால் நடத்தப்பட்ட Elocution பரீட்சையில் திறமைச்சித்தி பெற்றிருந்தனர். குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இவ் வருடாந்த கலை மற்றும் பரிசளிப்பு நிகழ்வின்போது பதக்கங்கள் மற்றும் பரிசில்களும் வழங்கிக்கௌரவிக்கப்பட்டனர்.
    பெற்றோர்கள் பார்வையாளர்கள் என மண்டபம் நிறைந்திருந்த இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக ஹபீப் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியல் பீட பீடாதிபதி எஸ்.எம்.ஜுனைடீன், குளோபல் லைப் சர்வதேச பாடசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சம்பத் வண்டார, அல் மானார் மத்திய மகாவித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லாஹ்,டிமோ நிறுவனத்தின் ஏ.ஜி.எம்.நுசைக், ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணியும் சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் போசகருமான எம்.எஸ்.எம்.ஜெமீல், தென்கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களான எம்.எச்.அல் இஹ்சான், ஜி.உசா ஆகியோரும் இன்னும் பல அதிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

    சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் உள்ளிட்ட அதிதிகலாளால் மாணவர்களுக்கும் அதிதிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டதுடம் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சைல்ட் பெஸ்ட் பாலர் பாடசாலையின் 12 வது வருடாந்த நிகழ்வு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top