• Latest News

    December 06, 2016

    உம்றாக்கு பயணமானவர், காணாமல் போனார் - கண்டுபிடிக்க உதவுங்கள்

    உம்றா பயணத்தை மேற்கொள்வதற்காக நேற்று (04-12-2016) தனியார் பேரூந்தொன்றில் ஏறாவூர் நூருல் அமானி ஹஜ் ட்ரவல்ஸ் குழுவோடு அசர் தொழுகையை தொடர்ந்து ஏறாவூரிலிருந்து மாபோலை பள்ளிவாயலுக்கு பயணமான பக்கீர் முஹம்மட் “அலீ முஹம்மட்” என்பவரை இன்று -06- காலை 8.00 மணியிலிருந்து தற்பொழுது வரை காணவில்லை.
    தனது மனைவியுடன் உம்றாக் கடமைக்காக சென்ற 75 வயதுடைய குறித்த முதியவர் மாபோலை பள்ளியிலிருந்து தேனீர் குடிக்க ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற நேரத்திலேயே காணாமல் போயுள்ளர்.
    நிலையான நினைவாற்றல் குறைந்தவர் என குடும்பத்தார் கூறுகின்றனர்
    இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தயவு செய்து   தொடர்புகொள்ளுமாறு. கவலையில் இருக்கும் இவரது குடும்ப உறவுகள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
    தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
    பேரன் ஆசிக் - 075-2526040, 0779160745
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உம்றாக்கு பயணமானவர், காணாமல் போனார் - கண்டுபிடிக்க உதவுங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top