“நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்படுவோர் எவராக
இருந்தாலும், அவர்களைக் கைது செய்ய முடியும்” என்று, நீதி அமைச்சரும்
புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நேற்றுஇடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.
“அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக, மற்றொரு தகவல் வெளியாகியது. இதனால், அங்கு கலவரம் ஏற்படலாம் என்ற
சந்தேகத்தினால், விகாரையையும் அங்கு வருகை தந்த பிக்குமார்களையும்
பிரதேசவாசிகளையும் பாதுகாப்பதற்காகவே, பொலிஸார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
எனினும், அங்குள்ள பாதையை மூடுமாறு கோரி நீதிமன்றத்தினால் தடையுத்தரவு
விதிக்கப்படவில்லை ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கே தடையுத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைக் கிழித்தெறிந்தமையானது, சரியானதொரு
விடயம் என்று கருத முடியாது. நீதிமன்றத்தின் தடையுத்தரவை கிழித்தெறிந்து
நீதியை அவமதித்த பிக்குவை கைதுசெய்ய முடியுமேயொழிய, வேறெதுவும் செய்ய
முடியாது” என்றார்.

0 comments:
Post a Comment