எஸ்.அஷ்ரப்கான்-
ஸ்ரீ
லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கல்முனைக் கிளையினரின் ஏற்பாட்டில் முழு நாள்
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கொட்டும் மழையிலும் இன்று (06.12.2016)
செவ்வாய் கிழமை கல்முனை பிரதேசத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீனின்
பணிப்புரைக்கமைய பிராந்திய தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி என்.ஆரிப்
மற்றும்
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றைஸ் ஆகியோரின் வழிகாட்டலின்
கீழ் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் கல்முனைக்
கிளையினர் ஏற்பாட்டிலேயே இவ்வேலைத்திட்டம் கல்முனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது .
நோய்க் குடம்பிகள் உருவாகும் கல ன்கள், வெற்றுப் போத்தல்கள் அதி கம் காணப்படும் இடங்களை இனங்கண்டு அவற்றை அகற்றுவதுடன் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்
கல்முனைக் கிளையினால் விசேடமாக கொழும்பிலிருந்து வரவளைக்கப்பட்ட புகைவிசிறும்
இயந்திரத்தினுாடாக பிரதேசமெங்கும் புகைவிசிறுவதுடன் குப்பைகளும் அகற்றப்பட்டு
வருகின்றது.
இதன்போது ஸ்ரீ லங்கா தௌஹீத்
ஜமாஅத் கல்முனைக் கிளையின் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பொது சுகாதார
பரிசோதகர்களின் உதவியுடன் டெங்கு பரவும் இடங்களிலுள்ள குப்பைகளையும்,
வெற்றுபோத்தல்கள் கலன்களையும் அப்புறப்படுத்தி சுத்திகரிப்பு பணியில்
ஈடுபட்டனர்




0 comments:
Post a Comment