• Latest News

    December 03, 2016

    சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சி

    சில  சக்திகள் சிறுபான்மை  மக்களை  தூண்டி இனக்கலவரமொன்றை  ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தரப்பத்தில் சிறுபான்மை  மக்கள்  சமயோசிதமாக  அமைதி காக்க வேண்டும் என  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்கேட்டுக்  கொண்டுள்ளார்.
    மக்களின் பாதுகாப்பை   உறுதிப்படுத்துவதற்கும் மட்டக்களப்பு நகர் மற்றும்    ஏனைய  பகுதிகளில் சட்டத்தையும்  ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும்   தமது  பணப்புரையின் பேரில்  பொலிஸார்பாதுகாப்பு  கடமைகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
    இன்று மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா  அமைப்பினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில்  வினவிப்பட்ட போதே  முதலமைச்சர்  இதனைக் கூறினார்.
    எனவே  மக்கள்  குறித்த  சாரார் குழுமியிருக்கும் இடங்களுக்கு சென்று பிரச்சினைகள்  ஏற்பட வழி வகுக்காமல்  அமைதிகாக்க வேண்டும் எனவும்  அவர் கேட்டுக் கொண்டார்.
    மக்களின்  உணர்வுகளை  சீண்டி  பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு  பொதுபல சேனா அமைப்பினர்  முயற்சிக்கலாம் என்பதால் இதன் மூலம் ஏற்படும்  பிரச்சினைகள்  அவர்களுக்கு ஒரு சாதகமான  சூழலை ஏற்படுத்தும் என்பதை  புரிந்துகொண்டு  மக்கள் நடந்துகொள்ளவேண்டும்   என  கிழக்கு  மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ்  நசீர்  அஹமட் குறிப்பிட்டார்.
    மக்களுக்கு  எந்த வித  அசம்பாவிதங்களும்  ஏற்படாமல்  தடுப்பதற்கும்  அவர்களை  பாதுகாப்பதற்கும்  தமது  பணிப்புரைக்கமைய  மட்டக்களப்பு  நகர் மற்றும்  ஏனைய பகுதி  முழுவதும்  விசேட  பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாகவும் அதனால் மக்கள்   வீணாக  அச்சமடைய தேவையில்லை எனவும்  முதலமைச்சர்  தெரிவித்தார்
    எனவே   மக்கள்   பிரச்சினைகள்  ஏற்படும் வித்த்திலோ  வன்முறையான காரியங்களிலோ  இறங்கவேண்டமென கிழக்கு மாகாண முதலமைச்சர் வினயமாக கேட்டுக்கொண்டார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top