சட்டவிரோதமான முறையில் ஒருதொகை பணத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச்செல்ல முயற்சித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் அதிகாலை சுங்க அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 23 இலட்சத்து 20 ஆயிரம் (23,20,000) ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பைச் சேர்ந்த 46 வயதுடைய இந்த சந்தேக நபர் குறித்த பணத் தொகையுடன் டுபாயிற்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment