யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 41 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் நேற்றும் நேற்று முன்தினமும் யாழ் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதற்கு முன்னர் ஆறு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். கோப்பாய், மனிப்பாய், யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிர்வாக பிரிவுகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment