மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விகிதசாரமுறை மற்றும் தொகுதி முறையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக தேர்தல் தொகுதியை நிர்ணயம் செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய குழுவொன்றை நியமித்துள்ளார்.
கலாநிதி கே.தவலிங்கம் இதன் தலைவர். கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, பி.எம்.சிறிவர்த்தன, எஸ்.விஜயசந்திரன் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவார்.
தேர்தல் தொகுதியை நிர்ணயம் செய்வது தொடர்பில் அரசியல் கட்சிகள், பொது மக்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இக்குழு கோரியுள்ளது.
மாகாண சபை எல்லை நிர்ணயம் குறித்து ஆர்வம் கொண்டுள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஏனைய அமைப்புக்கள் இதன்போது தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும். அனுராதபுரம், திருகோணமலை, பொலநறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
அரசாங்கம் இம்முறை பசுமை வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜியபால ஹெட்டிராச்சி தெரிவித்துள்ளார். 2040ம் ஆண்டளவில் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் முற்றாக வீதிகளிலிருந்த அகற்றப்படுவதற்கான நீண்டகால சுற்றாடல் வேலைத்திட்டம் ஒன்று இதன்மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் துறைகளில் ஈடுபடுவோர் ஊக்குவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி நகரத்தில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜின் கங்கைக்கு அருகாமையில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு;ள்ளதாக தெரிவித்த அவர், இது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment