நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த
சம்பந்தனும், சுமந்திரனும் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக
இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு அறிவாயுதம் தமிழ்த் தேசிய ஆய்விதழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அரசியல் யாப்பு தமிழர்களுக்கான உரிமையை முற்றிலும் பறித்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்தவர் ராஜபக்ச என்றால், அந்தப் படுகொலையும், தமிழர்கள்
மீதான உரிமை மறுப்பையும் மூடி மறைப்பது சிறிசேன அரசு என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தனும், சுமந்திரனும் தமிழர்களுக்கு ஆதரவாகச்
செயல்படாமல், சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்காக அவர்கள் சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களைத் தமிழர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மீதமுள்ள
தமிழர்களையும், தமிழ் நிலங்களையும் காப்பாற்றும் உரிமை நமக்கு இருக்கிறது
என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில், இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித்
தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு,
இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன்,
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம், பேராசிரியர் ஜெயராமன், இயக்குநர்
கௌதமன், மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment