• Latest News

    November 22, 2017

    மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

    யாழ்ப்பாணம் – ஆறுகால் மடம் பகுதியில் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஒருவருக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், மற்றுமொருவருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    குற்றவாளிகள் தலா 10,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் 3 மாதம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்தார்.

    இதேவேளை, இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி யாழ். ஆறுகால் மடம் பகுதியில் தனது மகன்மார்களுடன் இணைந்து, குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டவர் மருமகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

    இதன்போது, அவர் கத்தியால் குத்தி தனது மருமகனைக் கொலை செய்துள்ளார்.

    மருமகனால் தனது மகள் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்படுவதாகத் தெரிவித்து, மருமகன் மீது அவர் தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த மாமனாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top