• Latest News

    November 22, 2017

    கையடையாள இயந்திரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள்

    பாடசாலைகளில் கையடையாள இயந்திரத்திற்கு எதிராக யாழ்ப்பாண பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
    இந்த ஆண்டு முதுல் வன்னிப் பாடசாலைகளில் சில தவிர வடமாகாணத்தில் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கையடையாள இயந்திரம் நடைமுறைக்கு வருகின்றது. இதனை நிறுத்தச் சொல்லியே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
    இந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டதாவது:
    மீள முடியாத பாதையில் வடக்கு மாகாணம். ஏங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எங்கள் கைகளில். ஆசிரியர்களே ஒன்றுபடுங்கள். வடக்கு மாகாணம் கல்வியில் 9வது இடத்தில் இருப்பதற்கு யார் காரணம் மீண்டும் மீண்டும் பின் தங்கி வைப்பதற்கு கையடையாள இயந்திரம். ஐகயடையாள இயந்திரத்தினால் ஆசிரியர்களுக்கு தேவையற்ற லீவு, மன உளைச்சல் ஏற்படுகின்றது.
    கையடையாள இயந்திரத்திற்கு வேலை செய்தால் போதும் என அதிகாரிகள் நினைக்கின்றனர். எனவே, அடுத்த ஆண்டில் தமிழ், ஆங்கில, சமூக விஞ்ஞான, அழகியல் போட்டிகள் போன்ற மேலதிக செயற்பாடுகளை நிறுத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    இந்தத் துண்டுப் பிரசுரங்கள் வெளிமாவட்டத்துக்கு பணிபுரியும் அரச உத்தியோகத்தர் பேருந்துகளிலும், வலிகாகம், மானிப்பாய் பகுதி, நெல்லியடி மத்திய கல்லூரி வீதி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலும் வழங்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
    நன்றி : உதயன் 2017.11.21


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கையடையாள இயந்திரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top