ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விடயத்தில் ஆகக் குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பையாவது நான் எடுத்திருந்திருந்தால் என்னை எப்போதோ தூக்கி உள்ளே போட்டிருப்பார்கள் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் மத்திய வங்கியை துப்பரவு செய்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜீப் ரஹ்மான் தாஜூதீன் தாஜூதீன் என கூறிக்கொண்டு பாராளுமன்றுக்குள் இப்போதும் ஓடித்திரிகிறார்.
சுஜீவ சேனசிங்க ஹெக்டர் அப்புஹாமி அஜித் பி பெரேரா தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் அர்ஜுன அலோசியஸ் முதலாளிக்கு தொலைபேசியில் உரையாடிய விடையங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தாஜுடீன் விடயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பாவது நான் எடுத்திருந்தால் என்னை தூக்கி எப்போதோ உள்ளே போட்டிருப்பார்கள் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
அண்மையில் தாஜுதீனை கொலை செய்தவரின் பெயரை தைரியமாக கூறுமாறு நான் பாராளுமன்றில் சவால் விட்ட போது அதற்கு பதில் அளிக்காமல் செய்தவர்களுக்கு அது தெரியும் என சுஜீவ சேனசிங்க நழுவிச்சென்றார்.

0 comments:
Post a Comment