யு.எல்.எம். றியாஸ் -
கல்முனை பிரதேசத்தில் மொத்த விற்பனைக் கடை ஒன்றில் இருந்து களவாடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி பால்மா பவுடர் பக்கட்டுகளை சம்மாந்துறை பொலிஸார் நேற்று இரவு கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பொருள் கடந்த 19ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடை ஒன்றில் இருந்து களவாடப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடடப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள தென்னம் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே இவை கைப்பற்றப் பட்டுள்ளன
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.கே. இப்னு அசார் தலைமையிலான குழுவினரே குறித்த பொருட்களை கைப்பற்றினார்கள்
ஒருபெட்டியில் குறித்த பால்மா 400 கிராம் பக்கட்டுகள் 36 அடங்கிய 89 பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபரையும் கைப்பற்றப் பட்ட பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவருகின்றன.

0 comments:
Post a Comment