நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில்
பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான
பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த
பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல்,
நிமோனியா (நுரையீரல் அழற்சி) ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை
பரப்புகின்றன.
ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள்
மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும்.
சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால்
உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும்.
ஈக்களால் நோய்க்கிருமிகளை பரப்ப முடியும் என்பது மக்களுக்கு
தெரிந்திருந்தாலும், எந்த அளவிற்கு அவை அபாயகரமானவை என்றும், எவ்வளவு தூரம்
அதன் தொற்று இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது" என்று பிபிசியிடம்
தெரிவிக்கிறார், பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் பிரையண்ட்.
திடீர் பரவல்
வீட்டில்
பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும்
நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக ஆய்வு நடத்தப்பட்டது.
வீட்டில்
பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன.
சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை
பரப்புகின்றன. இந்த இருவகை கொசுக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள்
பரப்பப்படுகின்றன.
பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும்
காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை `ஜர்னல்
சைண்டிபிக் ரிப்போட்` என்ற சஞ்சிகையில் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
"பொதுசுகாதார அதிகாரிகளால் நம்பப்பட்ட வழியில்,
நோய்க்கிருமிகள் எவ்வாறு எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன
என்பதன் கட்டமைப்பை இவை காண்பிக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மிகவும் வேகமான முறையில், நோய்க்கிருமிகளை பரப்புவதில் ஈக்களின் பங்கும்
இருக்கலாம் என்பதையும் இவை நிரூபிக்கலாம்" என்கிறார் பேராசிரியர் பிரயண்ட்.
"உங்களின் அடுத்த சுற்றுலாவின் போது, திறந்தவெளியில் நீங்கள்
சாப்பிடப்போகும் உணவுகள் குறித்து நிச்சயம் மறுசிந்தனை செய்வீர்கள்"
என்றும் அவர் கூறுகிறார்.
இருந்தபோதும், ஈக்களால் சில பயன்களும்
இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அவை, நோய்கள் வருவதற்கான
முன்னெச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம், அதேபோல, நுண்ணுயிரிகள் இருக்கும்
இடத்தை கண்டறிய, அவைகள் பயன்படும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
"சொல்லப்போனால்,
இந்த ஈக்கள் உயிருள்ள தானியங்கி டிரோன்களாக, மிகவும் குறுகிய இடங்களில்
கூட உயிரியல் விஷயங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய அனுப்பப்படலாம்" என்கிறார்,
சிங்கப்போரில் உள்ள நான்யாங் பல்கலைக்கழக ஆய்வாளரான ஸ்டீஃபன் ஷஸ்டர்.
குப்பைகளில் உட்காருதல், மக்கிப்போன உணவுகள், மிருகங்கள், அதன் கழிவுகளை
உண்ணுதல் உள்ளிட்ட மோசமான பழக்கவழக்கங்களுக்காக இந்த ஈக்கள்
அறியப்படுப்பவையாகும்.
அவை, மனிதர்கள், விலங்குகள் மற்றும் செடிகளைத் தாக்கும் பல நோய்களை பரப்புவதாக சந்தேகிக்கப்படுகின்றன.
இறந்த மிருகங்களுக்கு அருகில் அதிகம் காணப்படுபவையே இந்த நீல நிற ஈக்கள். அவை, புறநகர் பகுதிகளில் அதிகம் காணப்படுபவை.

0 comments:
Post a Comment