சஹாப்தீன் -
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென்று தமிழர் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை அரசியல் யாப்பில் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்த வரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்பதில் ஒருமித்த நிலைப்பாட்டைக் காண முடியாதுள்ளது. கிழக்கு மாகாணம் தனியாகவே இருக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸைத் தவிர ஏனைய முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பிரிந்து இருக்க வேண்டுமா என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் தெளிவானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கு இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளதேயன்றி அதன் பரப்பு எல்லைகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென்று தமிழர் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை அரசியல் யாப்பில் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ்க் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்த வரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்பதில் ஒருமித்த நிலைப்பாட்டைக் காண முடியாதுள்ளது. கிழக்கு மாகாணம் தனியாகவே இருக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸைத் தவிர ஏனைய முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டுமா அல்லது பிரிந்து இருக்க வேண்டுமா என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் தெளிவானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. வடக்கு, கிழக்கு இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு தரப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளதேயன்றி அதன் பரப்பு எல்லைகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இதே வேளை, தமிழர் தரப்பினர் வடக்கும், கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த வாரம் ஈ.பி.எல்.ஆர்.எப் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வடக்கு, கிழக்கு மாகாணம் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். இக்கருத்துப் பற்றி ரவூப் ஹக்கீம் எதுவும் தெரிவிக்கவில்லை.
கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்த வரை வடக்கும், கிழக்கும் தனியாக இருக்க வேண்டுமென்றே விரும்புகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின பாரளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான ஹரீஸ் கிழக்கு மாகாணத்தை இணைக்கக் கூடாதென்று தெரிவித்திருந்தார். இதுதான் கட்சியின் நிலைப்பாடு என்றும் கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இக்கருத்து குறித்து ரவூப் ஹக்கீம் அது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்திருந்தார்.
இதே வேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்பது முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அல்ல. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையாகும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்கக்; கூடாதென்றும் தெரிவத்துள்ளார். மறுபுறத்தில் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ரவூப் ஹக்கீம் முன் வைக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதா, கிழக்கு மாகாணம் தனியே இருப்பதா என்பதில் ஒரு தெளிவான முடிவில் அக்கட்சியின் தலைவமை இல்லாதுள்ளது என்பது தெளிவாகின்றது. அவர் புத்திசாதுரியமாக பதில் சொல்லுவதாக எண்ணுகின்றார்.
வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை என்றும், அது முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடல்ல என்றும் தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக முஸ்லிம்கள் நிற்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார். தமிழர்களின் நிலைப்பாடு இணைந்த வட, கிழக்கு மாகாணமாகும். முஸ்லிம்களின் நிலைப்பாடு கிழக்கு மாகாணம் இணையக் கூடாதென்பதாகும். தமிழர்களின் அபிலாசைகளுக்கு முஸ்லிம்கள் குறுக்காக நிற்கக் கூடாதெனும் போது மறைமுகமாக இணைந்த வட, கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்று தெரிகின்றது. இருப்பினும் முஸ்லிம் காங்கி;ரஸின் நிலைப்பாட்டில் ஒரு மயக்கத்தை காண முடிகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் இனப் பிரச்சினைத் தீர்வில் தமது உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். வட, கிழக்கு மாகாணம் நிபந்தனையின்றி இணைவதாக இருந்தாலும், நிபந்தனையுடன் இணைவதாக இருந்தாலும் அதற்குரிய தெளிவை முஸ்லிம்களுக்கு சொல்லுவது முஸ்லிம் காங்கிரஸின் மிகப் பெரிய பொறுப்பாகும். ஆனால், இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் மக்களை தெளிவூட்டும் நிகழ்ச்சியைச் செய்யவில்லை. ஒரு சில கருத்தரங்குகளை கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு செய்து இருந்தாலும் அக்கருத்தரங்களில் கூட சலசலப்பக்கள் ஏற்பட்டன. காரணம் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் திருப்தியளிக்கவில்லை.
இலங்கை முஸ்லிம்களின் அதிக ஆதரவைப் பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸாகும். முஸ்லிம்களின் குரல் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று அக்கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்னவென்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையிலும், முஸ்லிம்களின் அபிலாசைகளைக் கொண்ட ஆவணத்தை தெரிவிக்க முடியாமலும் இருப்பது அக்கட்சி முஸ்லிம்களின் குரல் என்பதற்கு ஏதுவாக அமையவில்லை.
மேலும், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதே போன்று முஸ்லிம்களின் அபிலாசைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இரண்டு சமூகங்களினதும் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இச்சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் திறந்த மனத்துடன் பேச வேண்டும். தங்களின் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை ஒளிவுமறைவின்றி முன் வைக்க வேண்டும். தமிழர்களுக்கு ஒரு முகமும், முஸ்லிம்களுக்கு ஒரு முகமும், சிங்களவர்களுக்கு ஒரு முகமும் காட்ட முடியாது. அவ்வாறு காட்ட முற்படுவது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தராது. மாறாக பிரச்சினைகளை இன்னும் சிக்கலாக்கவே வழி சமைக்கும். ஆதலால், இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் தமிழர்களும், முஸ்லிம்களும், அரசாங்கமும் தீர்வுகளை வெளிப்படையாக பேச வேண்டும். குறிப்பிட்ட தீர்வு யோசனைகளை மக்கள் எதிர்த்தால் கூட அதற்குரிய நியாங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி மக்களின் மனங்களை தீர்வின் பக்கம் திசை திருப்ப வேண்டும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பினர் குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் பற்றி மிகவும் தெளிவாக கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன. அக்கட்சி அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையேயும் ஒரே விதமாகவே பேசிக் கொண்டிருக்கின்றன. அக்கட்சி தரப்பினர்களை திருப்திபடுத்த வேண்டுமென்று கருத்துக்களை முன் வைக்காது தமிழர்களின் அபிலாசைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தெளிவு முஸ்லிம் காங்கிரஸிடம் இருப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் வேறுபட்ட முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலைப்பாடு இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கு தீர்வினைப் பெற்றுத் தராது. தெளிவற்ற கருத்துக்கள் குழப்பங்களை அதிகரிக்கச் செய்யும். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த தெளிவற்ற நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல தமிழர்களுக்கும் எதிரானதாகவே அமையும்., அரசியல் யாப்பொன்று ஏதோவொரு அடிப்படையில் நிறைவேற்றப்படவுள்ளது. ஆதலால், முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். பொதுவாக முஸ்லிம் காங்கிரஸ் சிக்கலான விடயங்களில் மதில் மேல் பூனையாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறு இருந்துவிட்டு ஈற்றில் ஏதாவது ஒரு பக்கத்திற்கு பாய வேண்டுமென்பதற்காக பிழையான பக்கமே பாய்ந்ததும் உள்ளது. பாய்ந்ததன் பின்னர் அது பிழையான பக்கம் என வருத்தம் தெரிவித்தும் உள்ளது. இதற்கு பலவற்றைக் சுட்டிக்காட்டலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் குரல் என்று தெரிவிக்கப்பட்டாலும் அரசாங்கத்தை திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காக அரசாங்கத்தின் சட்ட மூலங்களை ஆதரித்தே வந்துள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கவும், ஒருவர் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் தேர்தலில் போட்டியிடச் செய்யவற்காகவும் கொண்டு வரப்பட்ட 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்தது. பின்னர் கண்களை கட்டிக் கொண்டு பாதாளத்தில் விழுந்ததாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காகவும், ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாதென்பதற்காகவும் எனக் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்தது.
மாகாண சபைகள், உள்ளுராட்சி, பாராளுமன்ற தேர்தலை கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கு அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இது போலவே 18வது திருத்தம், 19வது திருத்தம், தேர்தல் முறை ஆகியவற்றிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்தார்கள். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸின் பொறுப்பு ஏனைய கட்சிகளை விடவும் அதிகமாகும். தமிழர்களின் உரிமைகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குரல் கொடுப்பதனைப் போன்று முஸ்லிம்களின் உரிமைகiளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் குரல் கொடுப்பது அவசியமாகும். இது அக்கட்சியின் தார்மீகப் பொறுப்பாகும்.
முஸ்லிம் காங்கிரஸும், ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் முறை மாற்றத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்கள். ஆனால், இதனால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்பதில் ஐயமில்லை. இதனை முஸ்லிம் காங்கிரஸும், ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள். தங்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலம் தங்களின் சமூகத்திற்கு தீங்காக அமையும் என்றால் குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேறினாலும் அது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதென்று வரலாற்றில் பதியப்பட வேண்டும். குறிப்பிட்ட சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்து விட்டு அது முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றும், ஏமாற்றி வாக்குளைப் பெற்றுக் கொண்டார்கள் என்றும், அவர்கள் வாக்களித்தார்கள் நாங்களும் வாக்களித்தோம் என்றும், எதிர்த்து வாக்களி;த்தாலும் சட்ட மூலம் நிறைவேறும் என்பதற்காக வாக்களித்தோம் என்றும் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பது வங்ரோத்து அரசியலாகும்.
முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம்களின் உணர்வுகளை மூலதனமாகக் கொண்டே அரசியல் செய்து வந்துள்ளது. தேர்தல் காலங்களில் மக்களிடம் உணர்ச்சிகளை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்று வந்துள்ளன. ஆனால், இனிவரும் தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பசப்பு வார்த்தைகளுக்கும், உணர்ச்சியை ஊட்டும் சொற்களுக்கும் மக்கள் ஏமாறமாட்டார்கள். இதனை எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இதற்கு தற்போது கல்முனைத் தொகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை நல்ல உதாரணமாகும். கடந்த காலங்களில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சாய்ந்தமருது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான உள்ளுராட்சி சபையை பெற்றுத்; தருவோம் என்று தெரிவித்தே முஸ்லிம் காங்கிரஸ், பிரதமர், அமைச்சர் றிசாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர்கள் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்று இங்கு நிலை தலை கீழாக மாறியுள்ளது. தங்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றி விட்டதாக வீதிக்கு இறங்கியுள்ளார்கள். இதனால், உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவோம் என்று எந்தக் கட்சியும் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது போலவே, அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேச முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் உள்ளார்கள் என்பது அப்பிரதேசத்தில் நடைபெறும் கருத்தாடல்களும், சந்திப் பேச்சுக்களும் தெளிவுபடுத்துகின்றன. கரையோர மாவட்டத்தைப் பெற்றுத் தருவோம். தென்கிழக்கு அலகைப் பெற்றுத் தருவோம் என்பது போன்ற கோசங்களை மர்ஹும் அஸ்ரப் முன் வைத்தார். அவற்றை அடைந்து கொள்வதற்கு போராடுவோம் என்ற வார்த்தைகளை அம்பாரை மாவட்ட முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளும் நிலையில்லை. இவைகள் காலம் கடந்த கோரிக்கைகள். தற்போது அரசியல் நிலை மாறியுள்ளது. பௌத்த இனவாதம் தலை தூக்கியுள்ளது. இதற்கு சார்பாக அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆதலால், முழு நாட்டு முஸ்லிம்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய திட்டங்களை வகுப்பதோடு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாத்துக் கொள்வதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு கரையோர மாவட்டமோ அல்லது இக்கரையோர மாவட்டத்தை தென்கிழக்கு அலகு என்று ஒரு மாகாண சபையையோ கோருவது கூட முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு ஏற்றதல்ல என்ற நிலைப்பாட்டை பெரும்பாலான கிழக்கு முஸ்லிம்களும், ஏனைய மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களும் கொண்டுள்ளார்கள். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இங்கெல்லாம் மேற்படி விவகாரங்கள் பேசப்படுகின்றன. இவைகள் முஸ்லிம் சமூகத்தை அரசியல் கட்சிகளினால் இனியும் பொய் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்ற முடியாதென்பதற்கான அத்தாட்சிகளாகும்.
நன்றி - வீரகேசாி
0 comments:
Post a Comment