- ரெ.கிறிஷ்ணகாந் -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேனவின் கையெழுத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பின் மூலம், காணியொன்றை அடகு வைத்து பெற்றுக் கொண்ட கடன் பணத்துக்காக சலுகைகளை பெற்றுத்தருமாறு வங்கிக்கு போலி கடிதமொன்றை உருவாக்கி அனுப்பிய சந்தேக நபர்கள் இருவரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி ஆவணத்தினை வங்கியில் சமர்ப்பித்த தாயும் அவரது மகனொருவரையுமே இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்களால் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு அதில் சதுரிக்காவின் கையெழுத்திடப்பட்டு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மகன் 2015 – 2016 தேர்தல் காலப்பகுதி கெடரிங் நிறுவனமொன்றை நடத்திவந்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளின்போது இந்நபர் உணவு மற்றும் பாண வகைகளை விநியோகித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தொியவந்துள்ளது.
இவர் கணினி உதவியுடன் குறித்த கடிதத்தலைப்பை பெற்றுக் கொண்டு, அதில் போலியாக கையெழுத்து மற்றும் உத்தியோகபுர்வ முத்திரையிட்டு வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தொியவந்துள்ளது.
0 comments:
Post a Comment