உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு, பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்கு பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் முதல் ஆய்வு இதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த ஆய்வறிக்கை, அமெரிக்க இதயக் கழகம் ஒருங்கிணைத்த சந்திப்பில் சமர்பிக்கப்பட்டது.
இதயம் முறையாக செயல்படாத போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயம் துடிப்பது உடனே நிற்கிறது. இதனால் சுயநினைவை இழக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுவாச இயக்கமும் நிற்கிறது. ‘கார்டியோபல்மனரி ரிஸாசிடேஷன் சிகிச்சை’ அளிக்காதபோது, அவர்கள் இறக்கவும் நேரிடுகிறது.
இதய இயக்க கோளாறு:
இதய இயக்க கோளாறிலிருந்து (Heart attack) இது முற்றிலுமாக வேறுபடுகிறது. ஹார்ட் அட்டாக், இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நிற்பதால் ஏற்படுகிறது. உடலுறவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது முன்பே அறிந்த ஒன்று. ஆனால், மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்பு முன்பு அறியாத ஒன்று.
மருத்துவர் சுமீத் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள அவருடைய சகாக்களும், 2002 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் மாரடைப்புக்கு உள்ளான போர்ட்லாண்ட் மற்றும் ஒரிகன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், உடலுறவினால் ஏற்படும் மாரடைப்புகள் 1 சதவீதத்துக்கும் குறைவானதாக இருந்து இருக்கிறது. அப்படி மாரடைப்புக்கு உள்ளானவர்களில், பெரும்பாலானவர்கள் ஆண்கள். அதுவும் குறிப்பாக நடுத்தர வயதுக்காரர்கள் மற்றும் முன்பே இதயநோய் உள்ளவர்கள்.
எனவே, ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.
0 comments:
Post a Comment