• Latest News

    November 27, 2017

    ரிஷாட்டின் முயற்சியில் சுவீகரிக்கப்பட்ட நெற்காணிகளுக்கான இழப்பீடு

    ஹிங்குரானை சீனித் தொழிற்சாலைக்காக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், சுவீகரிக்கப்பட்ட 319 ஏக்கர் நெற்காணியின் இழப்பீடு, பாதிக்கப்பட்ட கல்முனையைச் சேர்ந்த 35 பேருக்கு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் ஊடாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
    இதனடிப்படையில் அமைச்சர் ரிஷாட்டின் உத்தரவுக்கு அமைய, அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினர் சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டு, பிரதேச செயலாளர் உட்பட, ஏனையவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர். அத்துடன் இழப்பீடு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட குழுவினர், இது சம்பந்தமான ஆவணங்களைச் சேகரித்து மேலதிக நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி உள்ளனர்.
       


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிஷாட்டின் முயற்சியில் சுவீகரிக்கப்பட்ட நெற்காணிகளுக்கான இழப்பீடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top