-எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இலவன் ஸ்ட்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியை சுத்தம் செய்யும் மாபெரும் சிரமதானப்பணி இடம்பெற்றது.
வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.சலீம் செயலாளர் யூ.எல்.சத்தார் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதான பணியில் சட்டம் ஒழுங்கு தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
பற்றைக்காடாக காணப்பட்ட குறித்த பிரதேசம் கனரக வாகனத்தைக்கொண்டும் பங்குகொண்டிருந்தவர்களின் பங்களிப்புடனும் சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment