• Latest News

    November 20, 2017

    சாய்ந்தமருதில் “மதுவற்ற நாடு”

    -எம்.வை.அமீர்,
    யூ.கே.காலித்தீன்-

    சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மது ஒழிப்பு சமூக நற்பணி வேலைத்திட்டத்தின் கீழ்  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலமர்வும் NO RAUGS  இளைஞர்கள் நாம் என்ற உறுதிமொழி பிரகடனம் செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருது யூத் சென்டரில்  இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெற்றது.

    நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனையின் காரணாமாக எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பாகவும் சமுதாய சீர்கேடுகள் பற்றியும் அதிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் உரையாற்றினார்.
    கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹீட் கலந்துகொண்டதுடன் அதிதிகளாக இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களான இசட்.எம்.சாஜித், பைசர் டில்சாத் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அலியார் முபாறக், பிராந்திய உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
    நிகழ்வின் இறுதியில் NO RAUGS  இளைஞர்கள் நாம் என்ற உறுதிமொழி பிரகடனம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் “மதுவற்ற நாடு” Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top