இவ் வருடம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளான, திரு.தயாபரன் பாலசிங்கம், திருமதி.செல்வி சுதா ஆகியோர், "புங்குடுதீவில் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும் பெருக்குமரம்" குறித்தும், அதனை பார்வையிட செல்லும் வீதி குன்றும் குழியுமாக இருப்பது குறித்தும், குறிப்பிட்டு, எழுத்து மூலம் "புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்" தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, "புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிர்வாக சபையிடம்" முன்வைத்த கோரிக்கையை அடுத்து,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபை சார்பாக, யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் பலமுறை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்து உரையாடியதை அடுத்து,
முதற்கட்டமாக, "புங்குடுதீவில் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும் பெருக்குமரத்தை" பார்வையிட செல்லும் வீதியான புங்குடுதீவு கல்லடி அம்மன் வீதியினைப் புனரமைக்கும்படி யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம் கோரியதற்கமைய மாகாணசபை உறுப்பினர் திரு.விந்தன் அவர்கள், ஐந்து இலட்சம் ரூபா நிதியினைத் தனது ஒதுக்கீட்டின் மூலமும், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் ரூபா ஒன்பது இலட்சமும் ஒதுக்கி, ரூபா பதின்நான்கு இலட்சத்துக்கான (1,400,000.00) வேலைத்திட்டம் தற்பொழுது வேலணைப் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதனையும்,
இதனை யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.என். கனகரட்ணம் விந்தன் மற்றும் வேலணை பிரதேச சபை செயலாளர் திரு.A. குருநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு.K.மாதவன் ஆகியோர் 17.11.2017 அன்று சென்று பார்வையிடுவதனையும்,
கல்லடி அம்மன் ஆலயம் வரை சென்று பெருக்குமரம் வரை திருத்தப்பட வேண்டிய எஞ்சிய வீதியையும் பார்வையிட்டு, வீதியின் தூரம் 350 மீற்றர் எனவும், அதற்கான உத்தேச மதிப்பீடு 0.35 மில்லியன் (3.5 இலட்சம்) எனவும் மதிப்பீட்டு செய்வதனையும் படங்களில் காணலாம்.
கல்லடி அம்மன் ஆலயம் வரை சென்று பெருக்குமரம் வரை திருத்தப்பட வேண்டிய எஞ்சிய வீதியையும் முழுமையாகத் திருத்தித் தந்து உதவுமாறு, இன்றையதினம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான திரு.என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம், கோரிக்கை வைத்ததை அடுத்து, அதனையும் "வீதி அபிவிருத்திக்கென வட மாகாண சபையால் தனக்கென ஒதுக்கப்படும் நிதியில்" இருந்து நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment