இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 4 பில்லியன் ரூபாவினை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த 13ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகிய போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இன்று இவர்களது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்தார்.இவர்கள் தலா 50000 ரூபா ரொக்கப்பிணையிலும் 10 இலட்ச ரூபா சரீரப் பிணை இரண்டிலும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
November 21, 2017
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment