அலுவலக நிருபர்-உள்ளுராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எணணிக்கை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிவத்தல் செயற்பாட்டை தடுத்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (22.11.2017) இடைக்கால தடை உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கொழும்பு, கண்டி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய ஹாலிஎல ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 06 பேர் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு இன்று மூவரடங்கிய மேன் முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்டது. இதன் போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இந்த வழக்கில் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி வழக்கின் மனு மீதான நீதிமன்ற பரிசிலனையின் போது மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு வழக்கு விசாரணை இன்று (22.11.2017) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment