கஹட்டோவிட்டையில் இயங்கி வருகின்ற முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் (முஸ்லிம் லேடிஸ் ஸ்டடிஸ் சேர்கில்) தலைமை காரியாலயத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் மூலம் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 10 கணணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் குறித்த கணணிகள் இன்று புதன்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் பணிப்பாளரும், முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமாகிய அல்-ஹாஜ் அஹ்மத் முனவ்வர், முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் கொழும்புக் கிளையின் ஆலோசகரும், கொழும்பு வேகந்த ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான அல்-ஹாஜ் பசீர் லதீப் மற்றும் முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் ஆலோசகர் அல்-ஹாஜ் சிராஜுதீன் ஆகியோரிடம் மேற்படி கணணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் கஹட்டோவிட்டவுக்கு விஜயம் செய்த போது, முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தினால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகளை பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கணணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பொறியியலாளர் நிப்ராஸ் மொஹமட் மற்றும் நப்ரிஸ் மொஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


0 comments:
Post a Comment