மாத்தளை மாவட்டத்தின், நாவுலயிலுள்ள எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணய் கலந்து பெற்றோல் விற்பனை செய்த காரணத்துக்காகவே, குறித்த எரிபொருள் நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாவுல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தினால் விநியோகிக்கப்படும் பெற்றோலில் மண்ணெண்ணய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் மூலம் மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
அதனை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குழு, விசாரணைகளை மேற்கொண்டதோடு, அக்குழு மேற்கொண்ட சோதனையில் பெற்றோலில் மண்ணெண்ணய் கலப்படம் செய்திருப்பது உறுதியாகியது.
இதனையடுத்து, பெற்றோல் நிரப்ப பயன்படும் பம்பிகளுக்கும் நிலத்தின் அடியிலுள்ள தாங்கிகளுக்கும் கூட்டுத்தாபன அதிகாரிகளினால் சீல் வைக்கபபட்டது.
அத்துடன் குறித்த எரிபொருள் நிலையத்திலிருந்த பெற்றோலை கொழும்பிற்கு எடுத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தனியான விசாரணையொன்று இடம்பெறுவதாக, நாவுல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜயரத்ன திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment