• Latest News

    November 29, 2017

    அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு

    நுவரெலியா - டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்ரோயா ஆறு பெருக்கெடுத்து மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    மழை காரணமாக டயகம தோட்டம் 4ம் பிரிவில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 5 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன் மேலும் சில வீடுகளுக்கு சிறிதளவு வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
    தமது வீட்டில் ஒரு அறையேனும் இல்லாமல் வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது அலுமாரியில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் பாதிப்படைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
    பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை சேர்ந்த சுமார் 20ற்கும் மேற்பட்டோரை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
    அத்தோடு டயகம கிழக்கு தமிழ் மகா வித்தியலாயத்தில் ஒரு பகுதியில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் டயகம 3ம் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாக பகுதியிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top