கிந்தோட்டை கலவரத்தில் முஸ்லிம்களின் வீடுகள் உடைப்பதை பாதுகாப்பு படை வீரர்களே முன்னின்றும் செய்ததார்கள் இனவாதிகள் செய்வதற்கு அனுமதியளித்தார்கள் என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அப்பகுதி வாழ் மக்கள் கூறியுள்ளனர்.இந்த விடயம் மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் மஹிந்த ஆர்மியை அனுப்பி முஸ்லிம்களை தாக்கியதாக அஸாத் சாலி முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் கூறியிருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த அரசானது முஸ்லிம்களின் பூரண ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் இலங்கையில் நிலவும் கொடிய இனவாதத்தை ஒழித்து தாருங்கள் என்ற கோரிக்கையையே பிரதானமாக முன் வைத்திருந்தனர். இப்படி முஸ்லிம்களின் பூரண ஆதரவுடன் அமைக்கப்பட்ட இவ்வரசின் காலப்பகுதியில் தான் முஸ்லிம்கள் மீது இனவாதம் தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றது. இது முஸ்லிம்கள் பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ள கதை போன்று உள்ளது.
எமது குழு கிந்தோட்டை பகுதிக்கு நேரடி களவிஜயம் மேற்கொண்டது .பொலிஸ் அதிரடிப்படை முஸ்லிம்களின் வீடுகளை உடைத்ததாகவும் இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அதனை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு வேடிக்கைப்பார்த்ததாகவுன் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர் .
இது ஒரு பாரதூரமான விடயம்.நல்லாட்சி மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.இந்த விடயத்தை ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு தப்பிக்க முடியாது.அங்குள்ள மக்கள் சொத்துக்கள் உடைமைகளை இழந்துள்ளார்கள்.அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு அரசாங்கம் நின்றுவிடாமல் அவர்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் அரசு செயற்படவேண்டும்.
முஸ்லிம்களே இந்த முருகல் முற்ற காரணம் என சிலர் கூறுகிறார்கள்.ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு ஊரை கொழுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது இதே மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் கோத்தாவும் மஹிந்தவும் ஆர்மியை அனுப்பி முஸ்லிம்களை தாக்கியதாக சிலர் வாய் கூசாமல் கூறியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment