மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சகல வேலைத்திட்டங்களையும் ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயிலின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.
நேற்றிரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, ஏறாவூர் உள்ளிட்ட பல தாழ்நிலப்பகுதிகள், சில குடியிருப்புகளும், வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் அலுவலக நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளதுடன், பரீட்சைக்காக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அசௌகரியங்குள்ளான நிலையில் சில அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வருகையும் குறைந்து காணப்பட்டது.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பல தாழ்நில பகுதிகளில் தேங்கி இருந்த வெள்ள நீரை துரிதமாக அகற்றும் பணியில் மிகத் தீவிரமாக ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் ஈடுபட்டதுடன் அவரது நேரடி கண்காணிப்பின் கீழ் சகல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டடு வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் ஏறாவூர் பிரதேச பத்தாம் நம்பர் பால வடிகான், புளியடி வீதி வடிகான் உட்பட பல வீதிகளின் வடிகான்களில் நீரோடுவதற்கு தடையாகவுள்ள குப்பைகள் மற்றும் மண்ணை அகற்றி அவற்றை அப்புறப்படுத்தியுதும் சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்றாகும்.



0 comments:
Post a Comment