- ஊடகப்பிரிவு -
மல்வானை அல்-முபாறக் கனிஷ்ட பிரிவுக்கான இணைப்பு பாதையை அபிவிருத்தி செய்து, அதனுடன் இணைந்த வடிகாலமைப்பு திட்டத்தை நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நேரில்சென்று பார்வையிட்டார்.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 18 மில்லியன் ரூபா நிதியில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
பியகம சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட மல்வானையின் மத்திய பகுதியிலுள்ள மழைநீரை களனி கங்கையில் கொண்டுசேர்ப்பதற்கு இந்த வடிகாலமைப்புத் திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டம் செய்துமுடிக்கப்பட்ட பின் வல்கம, வேகந்த உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிநிற்கும் நீர் சீராக வடிந்துசெல்வதற்கு உதவும்.


0 comments:
Post a Comment