• Latest News

    December 01, 2017

    ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதி தனித்தீவானது : 250 குடும்பங்கள் படகு மூலம் மீட்கும் பணிகள் தீவிரம்

    கடந்த 29 மணி நேரம் பெய்த கனமழை கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டுள்ளது.  மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருவதால் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் 1,500 உயர்மின் அழுத்த கம்பங்கள், 2,500 குநை்த மின் அழுத்த கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.




    நெல்லை - நாகரகோவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  சுசீந்திரத்தில் மழை வெள்ளத்தால் 250 குடும்பங்கள் படகு மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.  சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கன்னியாகுமாரிக்கு செல்ல முடியாமல் பேருந்துகள் உள்ள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.இதனிடையே கனமழை வெள்ளம் காரணமாக சுசீந்திரந்திரம் தாணுமாலயன் கோவில் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளுக்குள் தவித்து வரும் மக்களை தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதி தனித்தீவானது : 250 குடும்பங்கள் படகு மூலம் மீட்கும் பணிகள் தீவிரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top