நடைபெறவுள்ள உள்ராளூட்சிமன்ற தேர்லில் மட்டு மாவட்டத்தில் 3,89,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்குடா பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் அடங்கும் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி ஏறாவூர் சபைகள் அடங்கலாக 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம்மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.இதுவரை 4 அரசியல் கட்சிகள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

0 comments:
Post a Comment