உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 158 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 154 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை தொடர்பில் நான்கு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கம்பஹா, குருநாகலை, ஆகிய மாவட்டங்களிலேயே அதிக முறைபாடுகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேர்தல் தொடர்பில் தலா ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment