தேசிய அடையாள அட்டையின்றி எந்தவொரு அபேட்சகரையும், வாக்கெண்ணும் நிலையங்களுக்கோ அல்லது தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்துக்கோ பிரவேசிக்க இடமளிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் 10 பேருக்கு கடவுச் சீட்டு மாத்திரமே உள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச்சீட்டு, மற்றும் ஓய்வூதிய அடையாள அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருத்தல் வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

0 comments:
Post a Comment